Home
Mobile

ஜூன்.10-க்கு அப்புறம் இதான்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்கள் மட்டுமல்லாமல், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட கொஞ்சம் கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களை எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் கஸ்டமர்களுக்கும் பக்கா ஆப்ஷனாக மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola Edge 60) களமிறங்க இருக்கிறது. ஏற்கனவே, வெளியான குளோபல் வெர்ஷனில் இருந்து சிப்செட் மற்றும் பேட்டரி அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. IP68/69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கும் இந்த மோட்டோரோலா போனின் முழு பீச்சர்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 10ஆம் தேதி இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மேட்டோரோலா இந்தியா தளத்தில் முழு பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், விலை விவரங்கள் மட்டும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், குளோபல் வேரியண்ட் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டை விட கம்மியான விலைக்கு வெளியானது. ஆகவே, ரூ.30,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

ஜூன்.10-க்கு அப்புறம் இதான்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

மோட்டோரோலா எட்ஜ் 60 அம்சங்கள் (Motorola Edge 60 Specifications): குளோபல் வெர்ஷனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி ( MediaTek Dimensity 7300 SoC) கிடைத்தது. ஆனால், இந்திய வெர்ஷனில் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7400 SoC) கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 3 ஓஎஸ் அப்கிரேட்களை கொடுக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. எச்டிஆர்10, எச்டிஆர்10பிளஸ், 1400 நிட்ஸ் எச்பிஎம் மோட் கொடுக்கப்படுகிறது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 60 சீரிஸ் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

இந்த மெயின் கேமராவுக்கு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் மட்டுமல்லாமல், ஆட்டோபோகஸ் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா சப்போர்ட் வருகிறது. இதுபோக 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் கொண்ட 10 எம்பி டெலிபோட்டோ கேமராவும் கிடைக்கிறது. அல்ட்ரா பிக்சல், குவாட் பிடிஏஎப், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது.

குளோபல் வெர்ஷனில் 5200mAh பேட்டரி கிடைத்தது. ஆனால், இந்திய வெர்ஷனில் 5500mAh பேட்டரி வருகிறது. கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களை தட்டித்தூக்க கேபாசிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 68W டர்போபவர் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனில் பான்டோன் ஜிப்ரால்டர் சீ (Pantone Gibraltar Sea) மற்றும் பான்டோன் ஷாம்ராக் (Pantone Shamrock) கலர்கள் வருகின்றன.

ஏப்ரல் மாதத்தில் மோட்டரோலா எட்ஜ் 60 ப்ரோ மாடலானது இந்திய மார்கெட்டில் வெளியாகியது. ரூ.29,999 பட்ஜெட்டில் மார்கெட்டுக்கு வந்தது. ஆனால், இந்த விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் கிடைத்தது. ஆகவே, வர இருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 60 மாடலானது, 12 ஜிபி ரேம் மாடலாக மட்டுமல்லாமல், பேட்டரி, சிப்செட் அப்கிரேட் கொடுப்பதால், அதுவும் ரூ.30,000 பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 With 50MP Camera To Launch India on June 10 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X