Home
Mobile

முரட்டு மோட்டோ.. ரூ.25,999 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. SONY கேமரா.. 12GB ரேம்.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம், 5500mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola Edge 60) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, IP69 ரேட்டிங் வாட்டர், கொரில்லா கிளாஸ் போன்ற ரக்கடு மாடலாக கிடைக்கும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 பிளிப்கார்ட் விற்பனை (Motorola Edge 60 Flipkart Sale): இந்த மோட்டோரோலா போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரேவொரு மாடல் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் வருகிறது. ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

முரட்டு மோட்டோ.. ரூ.25,999 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. SONY கேமரா!

நைலான் பேக் பேனல் பினிஷிங் கொண்ட பான்டோன் ஜிப்ரால்டர் சீ (Pantone Gibraltar Sea) கலரும், லெதர் பேனல் பினிஷிங் கொண்ட பான்டோன் ஷாம்ராக் (Pantone Shamrock) கலரும் ஆர்டருக்கு கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது.

இதுபோக IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) கிடைக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தாகவே குவாலிட்டி மட்டுமல்லாமல், டிசைனும் பிரீமியமாகவே இருக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 அம்சங்கள் (Motorola Edge 60 Specifications): இந்த போனில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் எச்பிஎம் (HBM) வருகிறது. எச்டிஆர்10பிளஸ் மற்றும் 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டோ கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (Octa Core 4nm MediaTek Dimensity 7400) சிப்செட் கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருடங்கள் செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஆகவே, லேட்டஸ்ட் யுஐ மற்றும் ஏஐ பீச்சர்களை இந்த மோட்டோவில் எதிர்பார்க்கலாம்.

முரட்டு மோட்டோ.. ரூ.25,999 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. SONY கேமரா!

256 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனில் 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ மற்றும் பஞ்ச்-ஹோல் கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

இந்த மெயின் கேமராவுக்கு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ ஆப்ஷன் கிடைக்கிறது. இதுபோக 10 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இதிலும் ஓஐஎஸ் டெக்னாலஜி, 30X ஜூமிங் மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 With 50MP Camera Sale Under Rs 25000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X