Home
Mobile

முரட்டு மோட்டோ.. மிட்-ரேஞ்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 5200mAh பேட்டரி.. 68W டர்போ சார்ஜிங்.. எந்த மாடல்?

கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் கொண்ட பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட மெயின் கேமரா, IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட், 68W டர்போ சார்ஜி்ங் கொண்ட 5200mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola Edge 60) போன் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் களமிறங்கி இருக்கும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரக்கட் டிசைனில் அதிகப்படியான டியூரபிலிட்டி கொடுக்கும் ஸ்மார்ட்போனை விரும்பும் பிரியர்களுக்கு இந்த மோட்டோ மாடல் பக்கா ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கும்படி எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் பெற்றுள்ளது.

முரட்டு மோட்டோ.. மிட்-ரேஞ்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. லெதர்-லைக் சிலிகான் ஃபினிஷிங் கொண்ட பேக் பேனல் கிடைப்பதால், பிரீமியம் + ரக்கட் லுக் கிடைக்கிறது. 7.9 எம்எம் தடிமன் மற்றும் 179 கிராம் எடை மட்டுமே கிடைக்கிறது. இதில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைனில் வருவதால், காம்பாக்ட் மாடலாக இருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 60 அம்சங்கள் (Motorola Edge 60 Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் திங்ஷீல்டு (ThinkShield) செக்யூரிட்டி கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கிடைக்கிறது. மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் களமிறங்கி இருக்கின்றன. 512 ஜிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card) சிலாட் கிடைக்கிறது. 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் கிடைக்கிறது.

மேலும், 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் வாட்டர் டச் சப்போர்ட் கொடுக்கிறது. சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் + ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

ஆட்டோ போகஸ் (Auto Focus) + மேக்ரோ சப்போர்ட் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதுபோக 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 30X சூப்பர் ஜூம் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

68W டர்போ பவர் சார்ஜிங் + 5200mAh பேட்டரி கிடைக்கிறது. பான்டோன் கில்ப்ரால்டர் சீ (Pantone Gilbraltar Sea) மற்றும் பான்டோன் ஷாம்ராக் (Pantone Shamrock) கலர்களில் கிடைக்க இருக்கிறது. இப்போது குளோபல் மார்கெட்டுக்கு வந்துள்ளது. யுகே மார்கெட்டில் விற்பனை தொடங்குகிறது. ரூ.43,133ஆக விலை இருக்கிறது. இந்தியாவில் ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 With 50MP Camera 5200mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X