புதுசு வந்துருச்சு.. 18 சதவீத ஆபரில் பழசு.. 5500mAh பேட்டரி.. pOLED டிஸ்பிளே.. 256 மெமரியுடன் Motorola போன்!
இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்லிம் மாடலான மோட்டோரோலா எட்ஜ் 70 வெளியாகியது. இதனால், மோட்டோரோலா எட்ஜ் 60 (motorola edge 60) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிஓஎல்இடி டிஸ்பிளே, 256 ஜிபி மெமரி மற்றும் 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் ஆஃபர் மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனுக்கு 18 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ரூ.25,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.1,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,999 விலைக்கு இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனை வாங்கி கொள்ளலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 அம்சங்கள் (motorola edge 60 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட்டை இந்த மோட்டோரோலா போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொடுத்து, 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது.
6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎஸ்இடி (pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுத்து இருக்கிறது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது.
இந்த வேரியண்ட்டில் 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டை பயன்படுத்தலாம். 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி ஆட்டோ போகஸ் அல்ட்ரா வைடு கேமராவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) சென்சாருடன் இந்த கேமரா கிடைக்கிறது. மேலும், 10 எம்பி டெலிபோட்டோ கேமராவை கொடுத்துள்ளது.
இந்த கேமராவுக்கு 3X சென்சார் ஜூமிங்கும், 30X சூப்பர் ஜூமிங்கும் கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் மேக்ரோ ஆப்ஷனை இந்த கேமரா சிஸ்டம் கொடுத்துள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 4K ரெசொலூஷன் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கிடைத்துள்ளது. 68W ஃபாஸ்ட் சார்ஜிங் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.
5500mAh பேட்டரி கொண்டுள்ளது. டால்பி அட்மோட் ஆடியோவை கொடுத்துள்ளது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது. பேண்டோன் ஜிப்ரால்டர் சீ (Pantone Gibraltar Sea) மற்றும் பேண்டோன் ஷாம்ராக் (Pantone Shamrock) கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனை பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola edge 70 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் உள்ளது.
மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ரூ.29,999 பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








