Home
Mobile

ஓரம் போ ஒன்பிளஸ்.. 6100mAh பேட்டரி.. 512ஜிபி மெமரி.. OLED டிஸ்பிளே.. வருகிறது Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது indiatimes வெளியிட்ட தகவலின்படி, மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா ( Motorola Edge 60 Ultra) எனும் போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய போனின் சரியான வெளியீட்டுத் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஓரம் போ ஒன்பிளஸ்.. 6100mAh பேட்டரி.. வருகிறது Motorola போன்..

மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Edge 60 Ultra Specifications): 6.82-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இன் டிஸ்பிேளிவ் 1200 x 2780 பிக்சல்ஸ், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமரா இதில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

ஓரம் போ ஒன்பிளஸ்.. 6100mAh பேட்டரி.. வருகிறது Motorola போன்..

6100mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 160W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதி இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா போனில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரூ.69,990 விலையில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா போன் அறிமுகாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 13 போனுக்கு போட்டியாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 அல்ட்ரா போன் வெளிவரும்.

photo credit: Cashify, YouTube, indiatimes

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 Ultra to Launch in India Soon: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X