அதிருது விற்பனை.. ரூ.21,999-க்கு pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 68W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட பிஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 மெயின் கேமரா, 68W வயர்டு சார்ஜிங் மட்டுமல்லாமல் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 STYLUS) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்கள் மற்றும் டியூரபிலிட்டி கொடுப்பதால், விற்பனையில் மிரளவிடுகிறது. அப்படியென்ன இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் இருக்கிறது?
இந்தியாவில் ஸ்டைலஸ் பென் (Stylus Pen) கொண்ட ஸ்மார்ட்போன்கள் பிரீமியம் விலைக்கே கிடைக்கின்றன. ஆனால், மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் மாடல்களிலேயே ஸ்டைலஸ் பென் கொடுக்கிறது. இதில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் சேர்ந்துள்ளது. அதே நேரத்தில் கேமரா, டிஸ்பிளே, சிப்செட் பீச்சர்களிலும் மிரளவிட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola Edge 60 STYLUS Specifications): இந்த மோட்டோ போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு மற்றும் அக்வா டச் (Aqua Touch) சப்போர்ட் கொண்ட 6.7 (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 3000 நிட்ஸ் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 446 பிபிஐ பிக்சன் டென்சிட்டி மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது. இதுபோக 1.5K ரெசொலூஷன் கொண்ட மாடலாக இருக்கிறது. ஸ்டைலஸ் பென் கிடைப்பதால் 2.5டி கர்வ்ட் டிசைன் கிடைக்கிறது. கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மட்டுமல்லாமல், MIL -STD-810H பாதுகாப்பு கிடைக்கிறது.
வேகன் லெதர் பேனல் டிசைனில் IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. பிளாஸ்டிக் ஃபிரேம் இருக்கிறது. ஆகவே, மெட்டாலிக் ஃபிரேம் எதிர்பார்க்க முடியாது. ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 7s Gen 2) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) + 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் மை யுஎக்ஸ் (My UX) கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி ரேம் பூஸ்ட் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டில் மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology), அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology), குவாட் பிடிஏஎப் (Quad PDAF) மற்றும் 4K ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், ஃபிளிக்கர் ரெடக்சன், ஆர்ஜிபி சென்சார் சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல செல்பீ ஷூட்டரில் குவாட் பிக்சல் டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இப்போது, பிளாப்கார்ட் தளத்தில் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்திய மார்கெட்டில் ஸ்டைலஸ் பென்னுடன் கிடைக்கும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனை ரூ.21,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications