Home
Mobile

பிளிப்கார்ட்டில் ஆர்டர் அள்ள போகுது.. 50 எம்பி சோனி கேமரா.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 STYLUS) ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி சோனி கேமரா, பிஓஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

இப்போது பிளிப்கார்ட்டில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1050 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட்டில் ஆர்டர் அள்ள போகுது..  ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்..

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola Edge 60 STYLUS Specifications): 6.7-இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2712 x 1220 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3), அக்வா டச் (Aqua Touch), 3000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன.

120Hz ரெஃப்ரெஷ் ரேட், 446 பிபிஐ பிக்சன் டென்சிட்டி மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக ஸ்டைலஸ் பென் இந்த போனில் கிடைக்கிறது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

மை யுஎக்ஸ் (My UX) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் பெற்றுள்ளது இந்த போன்.

50 எம்பி மெயின் கேமரா (Sony LYT 700C) + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 3 இன்-1 லைட் சென்சார் ஆகிய ரியர் கேமரா அமைப்புகளுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவும் இந்த போனில் உள்ளது.

பிளிப்கார்ட்டில் ஆர்டர் அள்ள போகுது..  ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்..

அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology), ஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology), குவாட் பிடிஏஎப் (Quad PDAF) மற்றும் 4K ரெக்கார்டிங் சப்போர்ட், ஃபிளிக்கர் ரெடக்சன், ஆர்ஜிபி சென்சார் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 STYLUS with 8GB RAM available at 28 percent discount on Flipkart: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X