Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்கும்.. ரூ.21,000 பட்ஜெட்ல SONY கேமரா.. pOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோரோலோ பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் சூப்பர்எச்டிபிளஸ் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் மெயின் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆகிய பீச்சர்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 STYLUS) வெளியாகி இருக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் வேகன் லெதர் பேனலுடன் பான்டோன் சர்ப் தி வெப் (PANTONE Surf the Web) மற்றும் பான்டோன் ஜிப்ரல்டர் சீ (PANTONE Gibraltar Sea) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. பில்ட்-இன் ஸ்டைலஸ் கிடைப்பதால், ஏஐ பவர்ட் ஸ்கெட்ச் டூ இமேஜ் (AI Powered Sketch to Image), மோட்டோ நோட் (Moto Note), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) போன்ற பீச்சர்கள் என்ஹான்ஸ் செய்யப்பட்டுள்ளன.

பிளிப்கார்ட் பிச்சிக்கும்.. ரூ.21000 பட்ஜெட்ல SONY கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola Edge 60 STYLUS Specifications): இந்த மோட்டோரோலா போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு மை யுஎக்ஸ் (My UX) கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் + 3 வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது.

இந்த பட்ஜெட்டில் மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபிக்கான ரேம் பூஸ்ட் (RAM Boost) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோவில் 6.7 (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு சூப்பர் எச்டிபிளஸ் (Super HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சன் டென்சிட்டி மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கிடைக்கிறது. மேலும், வெட் டச் கன்ட்ரோலுக்காக அக்வா டச் (Aqua Touch) உள்ளது.

பிளிப்கார்ட் பிச்சிக்கும்.. ரூ.21000 பட்ஜெட்ல SONY கேமரா.. எந்த மாடல்?

சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாருடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேக்ரோ ஆப்ஷனுடன் (Macro Option) 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

5000mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஃபாஸ்ட் சார்ஜிக் + வயர்லெஸ் சார்ஜிங் வரவேற்க வேண்டிய பீச்சர்களாகும். பேட்டரியுடன் 8.29 எம்எம் தடிமன் மற்றும் 191 கிராம் எடை வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், MIL-STD-810H டியூரபிலிட்டி மற்றும் IP68 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகவே, ரூ.21,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய முடியும். பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 STYLUS With 50MP Camera Launched Sale From April 23 Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X