நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Motorola 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் நாளை (ஏப்ரல் 15) இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. சோனி கேமரா, டால்பி அட்மாஸ், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன்வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola Edge 60 Stylus Specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 ( Snapdragon 7s Gen 2 SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (FHD+ 10-bit pOLED display) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் உள்ளது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன்.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போனில் உள்ளன. மேலும் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அறிமுகம் செய்யப்படும்.
50எம்பி சோனி எல்ஒய்டி-700சி சென்சார் (Sony LYT-700C sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக ரூ.23,000 பட்ஜெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த புதிய போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications