இதுதான் புதிய மோட்டோரோலா போன்.. 50எம்பி கேமரா.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus) ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் படங்கள் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் பின்புற பேனல் வடிவமைப்பு எட்ஜ் 60 ஃப்யூஷனைப் போலவே உள்ளது. மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவரும். மேலும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் ஆனது ரூ.22,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola Edge 60 Stylus Specifications): 6.7-இன்ச் pOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும்.குறிப்பாக ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் பின்புறும் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் ஆகிய கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் (fast wired charging) மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் (wireless charging) ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.
வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த புதிய மோட்டோரோலா போனில் உள்ளன.
Photo Credit: X/@yabhishekhd, gadgets360


Click it and Unblock the Notifications