மார்க்கெட்டே அதிர போகுது.. 50எம்பி கேமரா.. 60W சார்ஜிங்.. வருகிறது புது Motorola போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் புதிதாக மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஏப்ரல் 17-ம் தேதி இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என ஆன்லைனில் தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் கூட தற்போது வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola Edge 60 Stylus Specifications): டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (tipster Abhishek Yadav) வெளியிட்ட தகவலின்படி, 6.7-இன்ச் pOLED டிஸ்ப்ளே வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்.
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் (fast wired charging) மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் (wireless charging) ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.
வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








