Home
Mobile

ஏப்ரல் 15 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. வருகிறது Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஐபி68 ரேட்டிங், ஒஎல்இடி டிஸ்பிளே, சோனி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola Edge 60 Stylus Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (FHD+ 10-bit pOLED display) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஏப்ரல் 15 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Motorola போன்..

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 ( Snapdragon 7s Gen 2 SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நிறுவனம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் போனில் உள்ளது. அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன்.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் இந்த போனில் உள்ளன. குறிப்பாக My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி சென்சார் (Sony LYT-700C sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் ரூ.22,999 விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 STYLUS India launch date announced: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X