பொளந்து கட்டும் தீபாவளி ஆஃபர்.. அடிமட்ட ரேட்ல pOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 68W பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை 2025 (Flipkart Diwali Sale 2025) என்னும் சிறப்பு விற்பனையில் எந்த ஸ்மார்ட்போன் நிறுவனமும் கொடுக்க முடியாத பீச்சர்களுடன் அடிமட்ட விலைக்கு மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola edge 60 STYLUS) மாடல் ஆர்டருக்கு கிடைக்கிறது. நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் தள்ளுபடி போக வாங்க கிடைக்கிறது. பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5000mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.3,000 நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது. ஆகவே, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய முடியும். இதுபோக ரூ.1,000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் முதல் இன்-பில்ட் ஸ்டைலஸ் கொண்ட மாடலாக இது இருக்கிறது. அதேபோல ஈசிம் சப்போர்ட் கொடுக்கிறது. இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் மற்றும் MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது. மேலும், IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் லெதர் பேக் கொண்ட பான்டோன் சர்ப் தி வெப் (PANTONE Surf the Web) மற்றும் பான்டோன் கிப்ரல்டர் சீ (PANTONE Gibraltar Sea) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற பீச்சர்களும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாததாக இருக்கின்றன. இந்த பீச்சர்களுக்கு இது அடிமட்ட விலையாகும்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் அம்சங்கள் (Motorola edge 60 STYLUS Specifications): இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Qualcomm Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. மோட்டோ ஏஐ (Moto AI) கொண் மை யுஎக்ஸ் (My UX) உள்ளது.
2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். அக்வா டச் (Aqua Touch) சப்போர்ட் கொண்ட 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT-700C) சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (மேக்ரோ ஆப்ஷன் கொண்டது) கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.
இன்-பில்ட் ஸ்டைலஸ் கொடுக்கப்பட்டும், 5000mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் வழக்கமாக கிடைக்கும் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








