Home
Mobile

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கணும்.. pOLED டிஸ்பிளே.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி உலக சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola Edge 60) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் உள்ளன. அதேபோல் pOLED டிஸ்பிளே உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கணும்.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 அம்சங்கள் (Motorola Edge 60 Specifications) : 6.67-இன்ச் கர்வ்ட் பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 போன் அறிமுகமாகும். மேலும் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (in display fingerprint scanner) பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மாரட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆனாலும் மோட்டோரோலா எட்ஜ் 60 போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போன் மிலிட்டரி கிரேட் உறுதியுடன் (miltary-grade durability) MIL-810H சான்று பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக மேம்பட்ட AI அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இந்த மோட்டோரோலா போன்.

5200mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போ சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, மோட்டோரோலா எட்ஜ் 60 போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

source 1, 2

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 specifications leaked: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X