Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 90W டர்போ சார்ஜிங், 15W சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. கேமரா பிரியர்களுக்காக போட்டோ என்ஹான்ஸ்மெண்ட் என்ஜின் (Photo Enhancement Engine), சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் கொடுக்கும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 60 Pro Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் (Octa Core 4nm MediaTek Dimensity 8350 Extreme) சிப்செட் கிடைக்கிறது. ரேம் பூஸ்ட் டெக்னாலஜியுடன் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் சப்போர்ட் உள்ளது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

அதேபோல 256 ஜிபி மெமரி மற்றம் 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மற்றும் வாட்டர் டச் (Water Touch) சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Curved pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. சூப்பர் எச்டி (SHD) ரெசொலூஷன் பேக் செய்கிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 720Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மோஷன் பிளர், எச்டிஆர்10பிளஸ், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. செக்யூரிட்டியை பார்க்கையில், திங்க்சீல்டு (ThinkShield), மோட்டோ செக்யூர் 5.0 (Moto Secure 5.0), ரியர் டைம் கெர்னல் புரொடெக்சன் (Real-time Kernel Protection) வருகிறது.

அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி IP69 ரேட்டிங் கிடைக்கிறது. இதுபோக IP68 ரேட்டிங் மற்றும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி எதிர்பார்க்கும்படி MIL-STD-810H சப்போர்ட் வருகிறது. குவாட் பிக்சல் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. இந்த கேமராவில் சோனி எல்ஒய்டி 700சி சென்சார் மற்றும் பிடிஏஎப் ஆட்டோபோகஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

50 எம்பி அல்ட்ரா வைடு + மேக்ரோ கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி மற்றும் பேஸ்-டிடெக்சன் ஆட்டோபோகஸ் வருகிறது. 10 எம்பி டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூமிங், 50X சூப்பர் ஜூமிங், ஆட்டோபோகஸ் உள்ளது. ஒட்டுமொத்தமாக போட்டோ என்ஹான்ஸ்மெண்ட் என்ஜின், அல்ட்ரா எச்டிஆர், பான்டோன் ஸ்கின்டோன் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W பவர் ஷேரிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலோ எட்ஜ் 60 ப்ரோ போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.68,170ஆக இருக்கிறது. ஸ்பார்கிளிங் கிராப், ஷோடோ கிரீன் மற்றும் டாஸ்லிங் ப்ளூ கலர்களில் கிடைக்க இருக்கிறது.

இந்தியாவில் ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மோட்டோரோலோ எட்ஜ் 60 ப்ரோ போன் வெளியாக இருக்கிறது. இதை மோட்டோ இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேபோல பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பதும் உறுதியாகிவிட்டது. இப்போதே முழு பீச்சர்கள் தெரிய வந்துள்ளதால், இந்திய மோட்டோ பிரியர்கள் குஷியாகிவிட்டனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 Pro With Tested To Military Standards IP69 Protection Announced For Global Markets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X