ஏப்.30 குறிச்சாச்சு.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் மோட்டோ பிரியர்கள் எதிர்பார்த்தபடி மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல் மோட்டோ ஏஐ (moto ai) சப்போர்ட் கொண்ட மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) களமிறங்க இருக்கிறது. இந்த மோட்டோ போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. அதோடு முக்கிய பீச்சர்களும் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன.
ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் இந்த போன் வெளியாகிவிட்டதால், முக்கிய பீச்சர்கள் அனைத்தும் இப்போதே உறுதியாகிவிட்டன. இவை பிளிப்கார்ட் தளத்தின் மைக்ரோசைட்டில் வெளியாகிவையாகும்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 60 Pro Specifications): இந்த போனின் மோட்டோ ஏஐ 2.0 (moto ai 2.0) கிடைக்க இருக்கிறது. இதில் ஏஐ இமேஜ் ஸ்டூடியோ (AI Image Studio), ஏஐ பிளேலிஸ்ட் ஸ்டூடியோ (AI Playlist Studio), ஏஐ சிக்னேச்சர் ஸ்டைல் (AI Signature Style) மற்றும் ஸ்மார்ட் கனெக்ட் (Smart Connect) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
சோனி எல்ஒய்டி 700சி (SONY LYT700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + மேக்ரோ கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 50X ஏஐ சூப்பர் ஜூமிங் (AI Super Zooming) கொண்ட 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த மோட்டோவில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் (MediaTek Dimensity 8350 Extreme) சிப் வருகிறது.
90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் பான்டோன் ஸ்கின்டோன் (PANTONE SkinTone), கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Class) புரொடெக்சன் மற்றும் டால்பி அல்மோட் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), வாட்டர் டச் 3.0 (Water Touch 3.0), விஷன் பூஸ்டர் (Vision Booster) மற்றும் ஆன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (On display Fingerprint) சென்சார் கிடைக்கிறது. டஸ்ட் மற்றும் ஹை-பிரசர் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி IP69 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது. செக்மெண்ட் லீடிங் வேப்பர் கூலிங் சேம்பர் (Vapor Colling Chamber) கிடைக்கிறது. மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங், ஏஐ ஆக்சன் ஷாட் (AI Action Shot), ஏஐ சிக்னேச்சர் ஸ்டைல் (AI Signature Style) மற்றும் ஏஐ குரூப் ஷாட் (AI Group Shot) போன்ற கேமரா பீச்சர்கள் உள்ளன.
ஆட்டோ வீடியோ என்ஹான்ஸ்மெண்ட் (Auto Video Enhancements) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் 3 ஜெனரேஷன் ஓஎஸ் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.31,999 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








