மிரளுது விற்பனை.. pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கொண்ட பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட மெயின் கேமரா, 90W டர்போபவர் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் சிப்செட் கொண்ட இந்த மோட்டோரோலா போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ பிளிப்கார்ட் விற்பனை (Motorola Edge 60 Pro Flipkart Sale): இந்த மோட்டோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

பிரீமியம் லுக் கொடுக்கும்படியான வீகன் லெதர் பேனலுடன் பான்டோன் டாஸ்லிங் ப்ளூ (Pantone Dazzling Blue) கலர் கிடைக்கிறது. மேலும், பான்டோன் ஷோடோ (Pantone Shadow) மற்றும் பான்டோன் ஸ்பார்க்ளிங் கிரேப் (Pantone Sparkling Grape) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. ஏஐ பீச்சர்களை அக்சஸ் செய்யும்படி ஏஐ கீ (AI Key) பட்டன் கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 60 Pro Specifications): குவாட் கர்வ்ட் டிசைன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் சூப்பர்எச்டி ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 720Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மிட்-பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 Extreme 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.

மூன்று ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ஜ்கள் வருகின்றன. சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியும், 4K வீடியோ ரெக்கார்டிங்கும் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை பேக் செய்துள்ளது. மேக்ரோ + ஆட்டோ போகஸ் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு உள்ளது.
இதுபோக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 3X டெலிபோட்டோ ஜூம், 50X சூப்பர் ஜூம் மற்றும் லைட் சென்சார் சப்போர்ட் கொண்ட 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கிடைக்கிறது. கொரில்லா கிளாஸ் மட்டுமல்லாமல், அதிகப்படியான டியூரபிலிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ டியூரபிலிட்டி (Motorola Edge 60 Pro Durability): இந்த மோட்டோ போனில் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கும்படியான வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதுபோக மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military Grade Durability) கொடுக்கும் MIL STD-810H சர்டிபிகேஷனை கொடுக்கிறது. கிட்டத்தட்ட ரக்கட் மாடலாகவே இருக்கிறது.

பேட்டரி பேக்கப்பை பார்க்கையில், வயர்டு சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆல்-ரவுண்ட் மாடலாக இது இருக்கிறது. ஆகவே, இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனில் 90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging) கொண்ட பெரிய 6000mAh பேட்டரி பேட்டரி கிடைக்கிறது. மேலும், 15W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) உள்ளது.
இதுபோக 5W வயர்டு பவர் ஷேரிங் (Wired Power Sharing) சப்போர்ட் வருகிறது. மேலும், யுஎஸ்பி பவர் டெலவரி 3.0 (USB Power Delivery 3.0) கிடைக்கிறது. ஆகவே, நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இவ்வளவு பெரிய பேட்டரி கிடைப்பதால், 8.24 எம்எம் தடிமன் வருகிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் பாடி எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், ஹேண்டி லுக் கிடைக்கிறது.
ஆடியோ பீச்சர்களை பார்க்கையில், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் 2 மைக்ரோபோன்கள் வருகின்றன. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனில் திங்க்சீல்டு (ThinkShield), பேஸ் லாக் (Face Lock) மற்றும் ஆன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (On screen fingerprint Sensor) கிடைக்கிறது.
இதுபோக ப்ரன்ட் & பேக் என்று 2 பக்கங்களிலும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient light Sensor) கிடைக்கிறது. 8 ஜிபிக்கா ரேம் பூஸ்ட் (RAM Boost), மாலி ஜி615 எம்சி5 ஜிபியு (Mali G615 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு, அக்வா டச் (Aqua Touch) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இப்போது, ஏஐ கீ மட்டுமல்லாமல், அதனுடன் கிடைக்கும் ஏஐ பீச்சர்களை பார்ப்போம்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஏஐ பீச்சர்கள் (Motorola Edge 60 Pro AI Features): ஏஐ கீ பட்டன் மூலம் டபுள் கிளிக் செய்து ஏஐ பீச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஜெமினி லைவ் (Gemini Live), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) பீச்சர்கள் அடங்கும். இதுபோக ஸ்மார்ட் டிவைஸ் சின்ங் (Smart Device Sync), மோட்டோ செக்யூர் (Moto Secure) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன.
ரியர் கேமராவில், போட்டோ என்ஹான்ஸ்மெண்ட் என்ஜின் (Photo Enhancement Engine), ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision), ஆட்டோ பிளிக்கர் கரெக்சன் (Auto flicker Correction), ஆட்டோ ரெட்-ஐ ரிமூவல் (Auto Red eye Removal) போன்ற பிரத்யேக பீச்சர்கள் கிடைக்கின்றன. செல்பீ கேமராவில் பேஸ் ரீடச் (Face Retouch), செல்பீ போட்டோ மிரர் (Selfie Photo Mirror) போன்ற பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








