ரெடியா இருங்க.. இந்தியாவுக்கு வரும் புதிய Motorola போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் அடுத்து மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது BIS சான்றிதழ் தளத்தில் XT2503-2 எனும் மாடல் நம்பர் உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் காணப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனுக்கு அடுத்து இந்த இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம்.
அதேபோல் 6.67-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 22712 x 1220 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோஃபோகஸ் கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது . செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் 4500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது . மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். தற்போது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் ரூ.27,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








