Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. வருகிறது புதிய Motorola போன்கள்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ரூ.22,999 பட்ஜெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் (Motorola Edge 60 FUSION) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola Edge 60) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ(Motorola Edge 60 Pro) போன்களையும் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதாவது வரும் வாரங்களில் மோட்டோரோலா எட்ஜ் 60 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன்கள் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புதிய மோட்டோரோலா போன்களின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய Motorola போன்கள்..

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 60 Pro Specifications) : 6.67-இன்ச் கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே (curved OLED display)வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன் அறிமுகமாகும். மேலும் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (in display fingerprint scanner) உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவரும். அதேபோல் 6000mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 10எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 60 அம்சங்கள் (Motorola Edge 60 Specifications): மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் பின்புறம் 50எம்பி சோனி எல்ஒய்டி700சி பிரைமரி சென்சார் + 13எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் பிரத்யேக 3-இன்-1 லைட் சென்சார் ஆதரவும் உள்ளது. அதேபோல் மோட்டோ ஏஐ சூட் அம்சங்களையும் (Moto AI suite features) ஆதரிக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது.

மீடியாடெக் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும்.

pOLED கர்வ்ட் டிசைன் டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் ( Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

5500mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65W டர்போபவர் சார்ஜிங் ( 65W TurboPower charging) ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனில் உள்ளன.

photo credit: 91mobiles, motorola

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 Pro Pro and Edge 60 specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X