சத்தமின்றி சர்ப்ரைஸ் கொடுத்த Motorola.. ஆண்ட்ராய்டு 17 Beta அப்டேட்.. எந்த போனுக்கு தெரியுமா?
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 17 பீட்டா அப்டேட் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சமூகவலைத்தளங்களில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 17 பீட்டா அப்டேட் கிடைத்துள்ளதால் பயனர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த அப்டேட் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உடன் வெளியாகி உள்ளது.
அதாவது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ வழங்கப்பட்ட ஆண்ட்ராய்டு 17 பீட்டா அப்டேட்டில் வைஃபை, செல்லுலார் நெட்வொர்க் மற்றும் பேட்டரிக்கான புதிய ஐகான்கள், ஒரு புதிய வால்யூம் இன்டர்ஃபேஸ், புதிய கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செட்டிங்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அப்டேட்டில் புதிய மோட்டோ AI அசிஸ்டன்ட்டான Qira உள்ளது. இது ஸ்மார்ட் கனெக்ட் (Smart Connect) மூலம் கிளவுட் கனெக்டிவிட்டியையும், ஒரு புதிய நோட்டிஃபிகேஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 17 பீட்டா அப்டேட் ஆனது விரைவில் பல மோட்டோரோலா 5ஜி போன்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro Specifications) : 6.7-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் 4என்எம் (Octa Core Dimensity 8350 Extreme 4nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி6 ஜிபியு (Mali-G615 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனில் உள்ளது.
50எம்பி சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) சென்சார் + 50எம்பி ஆட்டோ போகஸ் அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 50X சூப்பர் ஜூம், மல்டிஸ்பெக்ட்ரல் 3-இன்-1 லைட் சென்சார், எக்ஸ்போஷர், ஆட்டோ ஒயிட் பேலன்ஸ், ஃப்ளிக்கர் உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு MIL-STD-810H இராணுவ-தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ மாடல். Moto AI அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. பான்டோன் டாஸ்லிங் ப்ளூ (Pantone Dazzling Blue), பான்டோன் ஷேடோ (Pantone Shadow) மற்றும் பான்டோன் ஸ்பார்க்லிங் கிரேப் (Pantone Sparkling Grape)நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications