இந்தியாவில் அறிமுகமானது புது Motorola போன்.. சோனி கேமரா.. ஐபி69 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதுவும் 6000எம்ஏஎச் பேட்டரி, ஐபி69 ரேட்டிங், சோனி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro Specifications) : 6.7-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் ( Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் 4என்எம் ( Octa Core Dimensity 8350 Extreme 4nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி6 ஜிபியு (Mali-G615 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) சென்சார் + 50எம்பி ஆட்டோ போகஸ் அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 50X சூப்பர் ஜூம், மல்டிஸ்பெக்ட்ரல் 3-இன்-1 லைட் சென்சார், எக்ஸ்போஷர், ஆட்டோ ஒயிட் பேலன்ஸ், ஃப்ளிக்கர் உள்ளிட் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. பின்பு ஆனது MIL-STD-810H இராணுவ-தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ மாடல். Moto AI அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. பான்டோன் டாஸ்லிங் ப்ளூ (Pantone Dazzling Blue), பான்டோன் ஷேடோ (Pantone Shadow) மற்றும் பான்டோன் ஸ்பார்க்லிங் கிரேப் (Pantone Sparkling Grape)நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.33,999-ஆக உள்ளது. தற்போது இந்த போனின் முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் மே 7-ம் தேதி பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா. இன் தளங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








