ஏப்ரல் 24 உறுதி.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. வருகிறது புதிய Motorola போன்கள்.. எந்த மாடல்?
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா (motorola razr 60 ultra) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) ஸ்மார்ட்போன்களை வரும் ஏப்ரல் 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த இரண்டு போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 60 Pro Specifications) : 6.67-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன். மேலும் 22712 x 1220 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன் அறிமுகமாகும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் மாலி ஜி614 எம்சி6 ஜிபியு (Mali G615 MC6 GPU) கிராபிக்ஸ் வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ விற்பனைக்கு வரும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன..
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் ( Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
6000mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை 6இ, ப்ளூடூத் 5.4, உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.39,000 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 60 Ultra Specifications): 6.96-இன்ச் FlexView ஃபுல் எச்டி பிஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் வெளிப்புறம் 4-இன்ச் டிஸ்பிளே வசதியும் உள்ளது. 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), டால்பி விஷன் ( Dolby Vision) உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் எலைட் (Snapdragon 8 Gen Elite) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போன் வெளிவரும். மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் பேக் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி டெலி போட்டோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ரேஸர் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ள வால்யூம் ராக்கர் மற்றும் பவர் கீ ஆகியவைகள் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனராகவும் வேலை செய்யும் என்பது போல் தெரிகிறது. இருப்பினும், இடது பக்கத்தில் ஒரு புதிய பட்டன் இருப்பதாகவும் தெரிகிறது. அதன் செயல்பாடு குறித்து எங்களுக்கு இன்னும் உறுதியாக தெரியவில்லை. இது மோட்டோ ஏஐ அசிஸ்டன்ட்-க்காக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன், பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷும் உள்ளது. மேலும் இதன் ஃபிரேம் அலுமினியத்தால் ஆனது.
4500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் IPX8 வாட்டர் ரெசிஸ்டன்ட் (water resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் ( Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை 6இ, ப்ளூடூத் 5.3 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போன் வெளிவரும். மேலும் இந்த புதிய போன் சற்று உயர்வான விலை விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications