Motorola கம்பெனியில் இப்படியொரு போனை தான் எதிர்பார்த்தோம்.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ (Motorola Edge 60 Neo) எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஐபி69 ரேட்டிங், 68W சார்ஜிங், சோனி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ அம்சங்கள் (Motorola Edge 60 Neo Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

அதேபோல் மோட்டோ ஏஐ, ஜெமினி, சர்க்கிள் டு சர்ச் உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200×2670 பிக்சல்ஸ், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 4கே வீடியோ பதிவு ஆதரவு, மேக்ரோ ஆப்ஷன் உள்ளிட் அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய மோட்டோரோலா போனில் உள்ளன. ஆகவே இந்த போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது புதிய மோட்டோரோலா போன்.
IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியும் உள்ளது. டால்பி அட்மாஸ், யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போனில் உள்ளது. பின்பு இந்த போனின் எடை 174.5 கிராம் ஆகும். பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ஆனால் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போன் முதலில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும். அதன்பின்பு விரைவில் இந்த போன் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த போனின் ஆரம்ப விலை 399 Euros (இந்திய மதிப்பில் ரூ.41,145) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








