கொஞ்சம் பொறுங்க.. OLED டிஸ்பிளே.. வருகிறது புதிய Motorola போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (motorola) நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ (Motorola Edge 60 Neo) போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் முதலில் ஐரோப்பாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளத. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போனின் சில விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ அம்சங்கள்: சிறிய OLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிேளிவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போன் அறிமுகமாகும். தற்பேது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): 6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் வெளிவந்தது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். பான்டோன் நாட்டிகல் ப்ளூ (Pantone Nautical Blue), பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் . இதுதவிர 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன். டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சாதனம்.
குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன். 4310mAh பேட்டரி உடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. தற்போது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications