இந்த Motorola போனுக்கு தான் ஊரே வெயிட்டிங்.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ (Motorola Edge 60 Neo) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு முன்பு வெளியான மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல் எட்ஜ் 60 நியோ போனும் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ அம்சங்கள் (Motorola Edge 60 Neo specifications): 6.36-இன்ச் எல்டிபிஒ பிஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,200 x 2,670 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன்(Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் 4என்எம் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (4nm octa-core MediaTek Dimensity 7400 chipset) வதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஐந்து வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி Sony LYTIA sensor மெயின் சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. அதேபோல் இந்த போனில் 4கே வீடியோ பதிவு ஆதரவும் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போன் அறிமுகமாகும். பின்பு MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது.

5200mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4, வைஃபை 6இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன. மேலும் இந்தியாவில் ரூ.25,000-க்கு கீழ் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








