Home
Mobile

புது Motorola 5ஜி போன் அறிமுகம்.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

மோட்டோரோலா நிறுவனம் இன்று புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola edge 60) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஐபி69 ரேட்டிங், ஒஎல்இடி டிஸ்பிளே, சோனி கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 அம்சங்கள் (Motorola edge 60 specifications): 6.7-இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே(quad-curved pOLED Display) வசதியுடன் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

புது Motorola 5ஜி போன் அறிமுகம்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

2.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (2.6GHz Octa Core MediaTek Dimensity 7400) சிப்செட் வசதி உடன் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி-615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

OIS ஆதரவு கொண்ட் 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் 4கே வீடியோ பதிவு ஆதரவைக் கொண்டுள்ளன இந்த போனின் கேமராக்கள்.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 181 கிராம் ஆகும்.

5500mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது .புளூடூத் வி5.4, வைஃபை 6, 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,999-ஆக உள்ளது. பான்டோன் ஜிப்ரால்டர் சீ (PANTONE Gibraltar Sea), பான்டோன் ஷாம்ராக் (Pantone Shamrock) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் ஜூன் 17 முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola edge 60 launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X