Home
Mobile

அடுத்த Motorola போன் ரெடி.. சோனி கேமரா.. 65W சார்ஜிங்.. 512ஜிபி மெமரி.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் (Motorola Edge 60 FUSION) ஸ்மார்ட்போன் சமீபத்தில் தான் இந்தியாவில் ரூ.22,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola Edge 60) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதாவது வரும் வாரங்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தற்போது மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அடுத்த Motorola போன் ரெடி.. சோனி கேமரா.. 65W சார்ஜிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 அம்சங்கள் (Motorola Edge 60 Specifications): மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் உள்ள அதே மீடியாடெக் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உடன் இந்த மோட்டோரோலா போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் பின்புறம் 50எம்பி சோனி எல்ஒய்டி700சி பிரைமரி சென்சார் + 13எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் பிரத்யேக 3-இன்-1 லைட் சென்சார் ஆதரவும் உள்ளது. அதேபோல் மோட்டோ ஏஐ சூட் அம்சங்களையும் (Moto AI suite features) ஆதரிக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது.

அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

pOLED கர்வ்ட் டிசைன் டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் ( Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

5500mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65W டர்போபவர் சார்ஜிங் ( 65W TurboPower charging) ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் மோட்டோரோலா எட்ஜ் 60 போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit:YTECHB

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 key Specifications and renders leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X