Home
Mobile

வெளுத்து கட்டும் விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு வருவதால், நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் (Motorola Edge 60 Fusion) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 11 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.22,999 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.21,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ ஆப்ஷனிலும் வாங்கி கொள்ளலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் அம்சங்கள் (Motorola Edge 60 Fusion Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட்டை இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே உள்ளது.

எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களுக்கு ஏற்ற மாடலாகவும் இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், எச்டிஆற்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைத்துள்ளது. மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1400 நிட்ஸ் எச்பிஎம் மோட் இந்த பிஓஎல்இடி டிஸ்பிளேவில் கொடுக்கப்பட்டு உள்ளது.

வெளுத்து கட்டும் விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி!

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுத்து உள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியை இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

மேலும், டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கொடுத்ததை போல ஒட்டுமொத்த பாடியும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது.1.5 மீட்டர்கள் ஆழம் மற்றும் 30 நிமிடங்களுக்கு வாட்டர் டியூரபிலிட்டி கிடைக்கிறது. மேலும், எம்ஐஎல் எஸ்டிடி 810எச் (MIL STD 810H) சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.

ஆகவே, மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம். சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. மேக்ரோ ஆப்ஷனை (Macro Option) கொடுத்து இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கிறது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. 8.25 எம்எம் தடிமன் மற்றும் 180.1 கிராம் எடை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 Fusion With 8GB RAM Available At 11 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X