Home
Mobile

ஃபயரு மாதிரி பட்ஜெட்.. வெறும் ரூ.20,999 போதும்.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh போன்ற பீச்சர்களுடன் நம்ப முடியாத பட்ஜெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் (Motorola Edge 60 FUSION) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் மிலிட்டரி கிரேடு குவாலிட்டி கொண்ட இந்த மோட்டோரோலா போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) டிஸ்பிளே புரொடெக்சன், எம்ஐஎல்-810எச் (MIL-810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் IP68, IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட பிரீமியம் குவாலிட்டி மாடலாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் வெளியாகி இருக்கிறது. முழு பீச்சர்களை மிரளவிடும்படி பேக் செய்துள்ளது.

ஃபயரு மாதிரி பட்ஜெட்.. வெறும் ரூ.20,999 போதும்.. pOLED டிஸ்பிளே மாடல்!

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் அம்சங்கள் (Motorola Edge 60 FUSION Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் வருகிறது.

இதுபோக 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த வேரியண்ட்களுக்கு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் மட்டுமல்லாமல், ஆன்டி ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti Fingerprint Coating) மற்றும் அக்வா டச் (Aqua Touch) சப்போர்ட் கொண்ட டிஸ்பிளே வருகிறது.

6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 4 கர்னர்களிலும் கர்வ்ட் டிசைன் கொடுப்பதால், குவாட் கர்வ்ட் மாடலாக இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

ஃபயரு மாதிரி பட்ஜெட்.. வெறும் ரூ.20,999 போதும்.. pOLED டிஸ்பிளே மாடல்!

சூப்பர் எச்டிபிளஸ் (Super HD+) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் போனில் 5500mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.25 எம்எம் தடிமன் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

இந்த கேமராவில் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த ஃபியூஷன் மாடலில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 3டி சிலிகான் வேகன் லெதர் (3D Silicon Vegan Leather) போனலுடன் பான்டோன் அமேசானைட் (Pantone Amazonite) கலர் கிடைக்கிறது.

மேலும், பான்டோன் ஸ்லிப்ஸ்ட்ரீம் (Pantone Slipstream) மற்றும் பான்டோன் ஜெஃப்ரி (Pantone Zephry) கலர்களும் கிடைக்கின்றன. மோட்டோ ஏஐ (Moto AI) பீச்சர்களை பேக் செய்துள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது.

இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக ரூ.20,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. ஏப்ரல் 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.2,000 டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் வேல்யூ, ரூ.10,000 மதிப்பில் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 FUSION With 50MP Camera Launched Sale From April 9 Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X