Home
Mobile

ரொம்ப டிமாண்ட்.. ஆஃபர் விலையில் 5500mAh பேட்டரி Moto போன்.. 68W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 5500mAh பேட்டரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூஷன் (Motorola Edge 60 Fusion) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (MediaTek Dimensity 7400) சிப்செட்டுடன் கிடைக்கும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் ரூ.20,999 விலைக்கு இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூஷன் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ரூ.1000 பேங்க் தள்ளுபடியை தகுதியான பேங்க் கார்டுகளுக்கு பெற்று கொள்ளலாம். ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.19,99 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரொம்ப டிமாண்ட்.. ஆஃபர் விலையில் 5500mAh பேட்டரி Moto போன்.. மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் அம்சங்கள் (Motorola Edge 60 Fusion Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளேவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாக இருப்பதால் பிரீமியம் அனுபவம் கிடைக்கிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது. ஆகவே, அவுட்டோரில் பட்டையை கிளப்பும் அவுட்புட் கிடைக்கும். 1400 நிட்ஸ் எச்பிஎம் மோட் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

எப்/1.88 அபெர்சர் மற்றும் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. எப்/2.2 அர்பெசர் மற்றும் மேக்ரோ ஆப்ஷனுடன் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilization Technology) 50 எம்பி மெயின் கேமராவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

எப்/2.2 அபெசர் கொண்ட 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் ஸ்மார்ட்போனில் ஐபி68 ரேட்டிங் & ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. எம்ஐஎல் எஸ்டிடி 810எச் (MIL STD 810H) சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுத்துள்ளது.

யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. 5500mAh பேட்டரியுடன் 68W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூசன் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

ஸ்லிம் மாடலாக எதிர்பார்க்க முடியவில்லை. ஏனென்றால், 8.25 எம்எம் தடிமன் உள்ளது. 180.1 கிராம் எடை வருவதால், லைட் வெயிட் மாடலாக எதிர்பார்க்கலாம். பான்டோன் ஸ்லிப்ஸ்ட்ரீம் (PANTONE Slipstream), பான்டோன் ஜெஃபிர் (PANTONE Zephyr) மற்றும் பான்டோன் அமேசனைட் (PANTONE Amazonite) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 Fusion With 50MP Camera Get Rs 1000 Bank Discount Check Flipkart Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X