ஏப்.2 தேதி குறிச்சாச்சு.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 5500mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஸ்மார்ட்போன் மார்கெட்டில் முதல்முறையாக ட்ரூ கலர் சோனி எல்ஒய்டி 700சி சென்சார் கேமரா மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு புரொடெக்சன், அண்டர் வாட்டர் கேமரா ரெசிஸ்டன்ட், 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion) களமிறங்க இருக்கிறது. ஏப்ரல் 2ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகமாக இருக்கும் இந்த மோட்டோரோலோ போனின் கேமரா, டிஸ்பிளே, சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருப்பதால், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதியாகிவிட்டது. பிரீமியம் வேகன் லெதர் பேனல் மற்றும் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் டிசைனில் கிரே (Grey), பிங்க் (Pink) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் வர இருக்கிறது. இந்த மோட்டோவுக்கு 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட், 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 60 Fusion Specifications): இந்த மோட்டோவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மற்றும் வாட்டர் டச் 3.0 (Water Touch 3.0) சப்போர்ட் கொண்ட 6.7 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த ட்ரூ கலர் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் வருகிறது.
மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), எஸ்ஜிஎஸ் ஐ கேர் புரொடெக்சன் (SGS Eye Care Protection) கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் மார்கெட்டில் முதல்முறையாக ட்ரூ கலர் சோனி எல்ஒய்டி 700சி (True Color Sony LYT 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 13 எம்பி அல்ட்ரா வைடு + மேக்ரோ லென்ஸ் கிடைக்கிறது.
மேலும், ஆம்பியன்ட் சென்சார் வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. இந்த கேமராவில் மோட்டோ ஏஐ (Moto AI) பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மெண்ட் (AI Photo Enhancement) மற்றும் ஏஐ அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன் (AI Adaptive Stabilization) பீச்சர்கள் வருகின்றன.
மேலும், ஏஐ மேஜிக் எரைசர் (AI Magic Eraser) மற்றும் ஏஐ மேஜிக் எடிட்டர் (AI Magic Editor) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மல்டிமீடியா ஏஐ பீச்சர்களை பார்க்கையில், சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஏஐ பர்சனல் அசிஸ்டன்ஸ் (AI Personal Assitance) வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் வருகிறது.
இந்திய மார்கெட்டில் முதல்முறையாக இந்த சிப்செட் களமிறங்க இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் மட்டுமல்லாமல், MIL-810H மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கொடுக்கிறது. ஆகவே, டியூரபிலிட்டி அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்கலாம். அண்டர் வாட்டர் கேமரா அவுட்புட் கிடைக்கும்படி IP68 + IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 5500mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்க இருப்பது உறுதியாகும்.


Click it and Unblock the Notifications








