நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Motorola 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
இந்தியாவில் நாளை (ஏப்ரல் 2) மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் மதியம் 12 மணி அளவில் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அம்சங்கள்(Motorola Edge 60 Fusion Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அறிமுகமாகும். பின்பு அட்ரினோ (Adreno) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.

6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஒஎல்இடி (quad-curved pOLED Display) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2712×1220 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (4500 nits peak brightness), 10-பிட் கலர்ஸ் உள்ள உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி (50MP Sony LYT-700C) பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன். அதேபோல் டால்பி அட்மாஸ்-டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போனில் 5ஜி, 4ஜி, ப்ளூடூத் வி5.2, வைஃபை 5, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. 5500mAh பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








