தரமான செய்கை.. புதிய நிறத்துடன் Motorola போன்.. டால்பி அட்மாஸ்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
கடந்த ஏப்ரல் மாதம் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் (Motorola Edge 60 FUSION) ஸ்மார்ட்போன் பான்டோன் அமேசானைட் (Pantone Amazonite), பான்டோன் ஸ்லிப்ஸ்ட்ரீம் (Pantone Slipstream) மற்றும் பான்டோன் ஜெஃப்ரி (Pantone Zephry) நிறங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய நிறத்தில் மீண்டும் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் தற்போது பான்டோன் மைக்கோனோஸ் ப்ளூ (Pantone Mykonos Blue) நிறத்தில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் அம்சங்கள் (Motorola Edge 60 FUSION Specifications): 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 2712 x 1220 பிக்சல்கள், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
ஆக்டா கோர் மீடியாடெக் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம்(Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5500mAh பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
டால்பி அட்மாஸ் ஆடியோவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் யூ.எஸ்.பி-சி ஆடியோ, ஹைப்ரிட் டூயல் சிம், 5 ஜி, வைஃபை 6, புளூடூத் 5.4 , என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications