வா ராசா.. உனக்கு தான் வெயிட்டிங்.. 68W சார்ஜிங்.. சோனி கேமரா.. 256ஜிபி மெமரி.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
வரும் ஏப்ரல் 2-ம் தேதி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அம்சங்கள்(Motorola Edge 60 Fusion Specifications): 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஒஎல்இடி (quad-curved pOLED Display) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2712×1220 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (4500 nits peak brightness), 10-பிட் கலர்ஸ் உள்ள உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி (50MP Sony LYT-700C) பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) உடன் அறிமுகமாகும். பின்பு அட்ரினோ (Adreno) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.
குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன். அதேபோல் டால்பி அட்மாஸ்-டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன.
5ஜி, 4ஜி, ப்ளூடூத் வி5.2, வைஃபை 5, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போனில் உள்ளதாக கூறப்படுகிறது. 5500mAh பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.20,000 பட்ஜெட்டில் இந்த புதிய மோட்டோரோலா அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன்.
photo credit: @MysteryLupin, themobileindian


Click it and Unblock the Notifications








