இந்த Motorola போனுக்கு தான் வெயிட்டிங்.. சோனி கேமரா.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்..
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா எட்ஜ் 60 (motorola edge 60) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் (motorola edge 60 fusion) ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த இரண்டு போன்களின் படங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதன்படி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்கள்.
மேலும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த புதிய போன்கள் வெளிவரும். குறிப்பாக இரண்டு போன்களில் 50MP சோனி LYTIA சென்சார் வசதி உள்ளது. எனவே இந்த போன்களின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு இரண்டு போன்களும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக தெரிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 60 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் போன்கள் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த போன்களின் படங்கள் மட்டும் தான் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போன்களின் அனைத்து அம்சங்களும்
வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு(Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
அதேபோல் 6.67-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 22712 x 1220 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோஃபோகஸ் கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது.
4500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
photo credit: winfuture @rquandt
Source: winfuture


Click it and Unblock the Notifications








