Home
Mobile

வெளுத்து கட்டுது விற்பனை.. ஆஃபர்ல MOTOROLA போன்.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் மோட்டோரோலா போனை ஆஃபர் விலை போக பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் கிடைக்கும் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் 5ஜி (Motorola Edge 60 FUSION 5G) மாடலை இப்போது வாங்கலாம். பீச்சர்கள் மட்டுமல்லாமல், பில்ட் குவாலிட்டியிலும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் 5ஜி பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த மோட்டோ போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த மோட்டோரோலா போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.22,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.24,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பேங்க் டிஸ்கவுண்ட் போக மேலும் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது.

வெளுத்து கட்டுது விற்பனை.. ஆபர்ல MOTOROLA போன்.. pOLED டிஸ்பிளே மாடல்!

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,100 உடனடி டிஸ்கவுண்ட் வருகிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 டிஸ்கவுண்ட் மற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் வருகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி அம்சங்கள் (MOTOROLA Edge 60 Fusion 5G Specifications): பிரீமியம் மாடல்களுக்கு நிகரான டிஸ்பிளே பீச்சர்களை பேக் செய்துள்ளது. அதாவது, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மற்றும் குவாட் கர்வ்ட் டிசைன் கொண்ட 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், சூப்பர் எச்டிபிளஸ் (SHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. வெட் டச் சப்போர்ட் கொண்ட அக்வா டச் (Aqua Touch) வருகிறது. அதேபோல ஆன்டி ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti Fingerprint Coating) பேக் செய்கிறது.

டிஸ்பிளேவுக்கு மட்டுமல்லாமல், பாடியிலும் டியூரபிலிட்டி கொடுக்க எம்ஐஎல்-810எச் (MIL-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி வருகிறது. இதுபோக IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இது கிட்டத்தட்ட ரக்கட் ஸ்மார்ட்போனுக்கு நிகரான பீச்சர்களாகும். ஆனால், கர்வ்ட் டிஸ்பிளேவில் கிடைக்கிறது.

ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (Octa Core 4nm MediaTek Dimensity 7400) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் கேமரா + லைட் சென்சார்கள் (ஆம்பியன்ட் + ஆர்ஜிபி + பிளிக்கர்) கிடைக்கிறது.

32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. கர்வ்ட் டிஸ்பிளே இருந்தும் 5500mAh பேட்டரி பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. பான்டோன் அமேசானைட் (Pantone Amazonite), பான்டோன் ஜெஃப்ரி (Pantone Zephry) மற்றும் பான்டோன் ஸ்லிப்ஸ்ட்ரீம் (Pantone Slipstream) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
MOTOROLA Edge 60 Fusion 5G With 8GB RAM Sale At Discounted Price on Flipkart Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X