இந்த Motorola போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்! 50எம்பி கேமரா.. 60W சார்ஜிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola Edge 60 ) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போனின் நிறங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
அதாவது மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் ஆனது பான்டோன் ஷாம்ராக் கிரீன்( Pantone Shamrock Green), பான்டோன் பிளம்பர்ஃபெக்ட் (Pantone Plumperfect), ஜிப்ரால்டர் சீ (Gibraltar Sea) நிறங்களில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 போன் அறிமுகமாகும். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 அம்சங்கள் (Motorola Edge 60 specifications): 6.67-இன்ச் கர்வ்ட் பிஒஎல்இடி டிஸ்பிளே(pOLED curved display)வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 போன் அறிமுகமாகும். மேலும் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் ( Corning Gorilla Glass 7i protection), 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட்உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவரும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவைக் கொண்டு வெளிவரும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா போன். அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 10எம்பி செகண்டரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும்.

5500mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 போன் வெளிவரும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் இந்த புதிய மோட்டோரோலா இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
photo credit: YTECHB.com, 91mobiles


Click it and Unblock the Notifications