விட்ராதீங்க சார்.. கிடைக்காத ஆஃபரில் Motorola 5ஜி.. 50MP கேமரா.. 5500mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி (MOTOROLA Edge 60 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 5500mAh பேட்டரி, 68W சார்ஜிங், 50 எம்பி சோனி சென்சார் கேமரா மற்றும் பிஓஎல்இடி டிஸ்பிளே கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் கொண்ட இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டுக்கு 18 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக, குறிப்பிட்ட பேங்க் கார்டுகள் மூலம் இதை ஆர்டர் செய்தால் ரூ.2,250 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, மேலும் கம்மியான ரூ.23,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும்.

இந்த பட்ஜெட்டிலும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. பிரீமியம் குவாலிட்டி கொடுக்க MIL-STD-810H என்னும் மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கொடுக்கிறது. டிசைனிலும் பிரீமியம் மாடலாகுக்கு நிகரான பில்ட் எதிர்பார்க்கலாம். 3 ஜெனரேஷன் ஓஎஸ் கொடுக்கிறது. மோட்டோ ஏஐ (Moto AI) பீச்சர்கள் வருகின்றன.
மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி அம்சங்கள் (MOTOROLA Edge 60 5G Specifications): இந்த மோட்டோரோலாவில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைப்பதால், பிரீமியம் மாடல்களுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் மற்றும் யுஐ எதிர்பார்க்க முடிகிறது.
அதோடு 12 ஜிபி ரேம் கிடைப்பதால், லேக்-ப்ரீ அனுபவம் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி கொடுக்கிறது. அதனுடன் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இவ்வளவு பிரைட்னஸ் கிடைப்பதால், அவுட்டோரிலும் பர்ஃபாமென்ஸ் பக்காவாக இருக்கும். மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி ஆட்டோ போகஸ் அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700சி (SONY LYT 700C) சென்சாரும், ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜியும் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ விஷன் கிடைக்கிறது. அதேபோல டெலிபோட்டோவில் 30X சூப்பர் ஜூம் மற்றும் 3X டெலிபோட்டோ ஜூம் கிடைக்கிறது. மேலும், ஓஐஎஸ் டெக்னாலஜி வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ள முடியும்.
அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங்குடன் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (Turbopower Fast Charging) கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio), டைப்-சி ஆடியோ (Type-C Audio), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கின்றன. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








