பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி (MOTOROLA Edge 60 5G) ஸ்மார்ட்போன் தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்ப மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலுமட தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி அம்சங்கள் (Motorola edge 60 5G specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (2.6GHz Octa Core MediaTek Dimensity 7400) சிப்செட் வசதி உடன் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி-615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் 6.67-இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே (quad-curved pOLED Display) வசதியுடன் புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி 5ஜி போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் 4கே வீடியோ பதிவு ஆதரவைக் கொண்டுள்ளன இந்த போனின் கேமராக்கள்.
குறிப்பாக IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 181 கிராம் ஆகும்.
புளூடூத் வி5.4, வைஃபை 6, 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 5500mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது .
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. அதுவும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








