இப்போ ஆர்டர் போடலாம்.. 50எம்பி கேமரா.. 68W சார்ஜிங்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த அசத்தலான மோட்டோரோலா போனின் விலை குறைந்துள்ளது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது கடந்த மாதம் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 போன் ஆனது ரூ.1000 விலை குறைப்பை பெற்று தற்போது ரூ.26,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.24,999 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50 Specifications): 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் வெளிவந்தது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி 3X டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவந்துள்ளது இந்த போன். செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் மேலும் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் போனுக்கு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
MIL-810H இராணுவ சான்றிதழ் இந்த மோட்டோரோலா போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போன் அறிமுகமானது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 மாடல். ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் பான்டோன் பீச் ஃபஸ் (Pantone Peach Fuzz) நிறங்களில் இந்த மோட்டோரோலா போன் விற்பனைக்கு வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
5ஜி எஸ்ஏஃஎன்எஸ்ஏ (5G SA/NSA) டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 5000mAh பேட்டரி மற்றும் 68Wசார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








