Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல SONY கேமரா.. pOLED டிஸ்பிளே.. 68W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் அறக்க பறக்க ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், பிஓஎல்இடி அவுட், சோனி எல்ஒய்டி கேமரா, 68W டர்போ சார்ஜிங், 5000mAh பேட்டரி, டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற மற்ற பீச்சர்களும் பிரீமியமாக வருகின்றன. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

பிரீமியம் டிசைனில் வேகன் லெதர் பேக் கொண்ட மாடல்களில் பக்கா பீச்சர்களை பேக் செய்துள்ள போனாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 இருக்கிறது. 3டி டிஸ்பிளேவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்திருந்தும் 7.79 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் கொடுக்கிறது. 180 கிராம் எடை மட்டுமே வருகிறது. டிசைனை போலவே பீச்சர்களும் மிரள விடுகிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல SONY கேமரா.. pOLED டிஸ்பிளே மாடல்!

மோட்டோரோலா எட்ஜ் 50 அம்சங்கள் (Motorola Edge 50 Specifications): இந்த மோட்டோவில் பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் கவர் செய்யப்பட்டுள்ளன. 3டி கர்வ்ட் & எண்ட்லெஸ் எட்ஜ் டிசைனில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டிருக்கிறது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. பிரீமியம் டிஸ்பிளே வருவதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது. இந்த டிஸ்பிளேவை போலவே இந்திய கேமரா பிரியர்களை தட்டித் தூக்கும்படி பிரீமியம் சென்சாருடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாருடன் வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிளைசேஷன் டெக்னாலஜி வருகிறது. 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவானது, மேக்ரோ ஆப்ஷனுடன் வருகிறது. அதேபோல 3x ஜூமிங் கொண்ட 10 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. கேமரா பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கிடைக்கும்.

மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ டெக்னாலஜி மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. IP68 ரெசிஸ்டன்ட் மற்றும் MIL 810H கிரேடு சர்டிபிகேஷன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி வருகிறது. 68W டர்போ சார்ஜிங் (Turbo Charging) வருகிறது. அதேபோல 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

இந்த சார்ஜிங்குக்கு 5000mAh பேட்டரி வருகிறது. ஜங்கிள் கிரீன் (Jungle Green), பான்டோன் பீச் பஸ் (Pantone Peach Fuzz) மற்றும் கோலா கிரே (Koala Grey) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதில் பீச் பஸ் மாடலில் வேகன் லெதர் (Vegan Leather) மற்றும் கிரே மாடலில் வேகன் சூடே (Vegan Suede) பேக் பேனல் வருகிறது. ஆகவே, பிரீமியம் லுக் கிடைக்கிறது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.7750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வருகிறது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 With 50MP Camera Sale Under Rs 25000 in Flipkart Discount Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X