மார்கெட் காலி.. pOLED டிஸ்பிளே.. 125W சார்ஜிங்.. QUAD கேமரா.. 12GB ரேம்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 64 எம்பி டெலிபோட்டோ கேமரா, 20X டிஜிட்டல் ஜூமிங், 125W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 4500mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேனல் டிசைனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சனுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra) 5ஜி போன் வெளியாகி இருக்கிறது. ரூ.10000 டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Edge 50 Ultra Specifications): இந்த மோட்டோவில் போர்ட்ராய்டு டெலிபோட்டோ கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா வருகிறது.

அல்ட்ரா-வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் ஆட்டோபோகஸ் கொண்ட 64 எம்பி போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த மூன்று கேமராக்களிலும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) வருகிறது. டெலிபோட்டோவில் 20X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது.
ஈஐஎஸ் (EIS) மற்றும் 4K அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. கேமரா பீச்சர்களை பார்க்கையில், ஸ்மார்ட் ஸ்டெபிளைசேஷன், அரிசோன் லாக், ஆட்டோபோகஸ் டிராக்கிங், செல்பீ வீடியோ மிரர், ஆடியோ எச்டிஆர், ஆடியோ ஜூம் உள்ளிட்டவை வருகின்றன. மேலும், போர்ட்ராய்டு, விலாக் மோட் மற்றும் ஸ்பாட் கலர் பீச்சர்கள் உள்ளன.
இந்த மோட்டோவில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் குவாட் பிக்சல் டெக்னாலஜி மற்றும் ஆட்டோபோகஸ் சப்போர்ட் வருகிறது. இந்த கேமராவில் போட்டோ என்ஹான்ஸ்மென்ட், ஆட்டோ நைட் விஷன், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், கெஸ்ச்சர் கேப்ச்சர், டூயல் கேப்ச்சர் மற்றும் போட்டோ பூத் உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன.

ஆகவே, இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவில் பிரீமியம் கேமரா அவுட்புட் எதிர்பார்க்கலாம். 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் பிஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், பி3 கலர் காமட், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
மேலும், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் வருகிறது.
12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. ஈசிம் சப்போர்ட் உள்ளது. டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், டால்பி ஹெட் டிராக்கிங் மற்றும் 3 மைக்ரோபோன்கள் வருகின்றன. IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட், 8.59 மிமீ தடிமன் மற்றும் 197 கிராம் எடை வருகிறது.
பேட்டரியில் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. 125W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. இந்த மோட்டோவில் ஃபாரஸ்ட் கிரே (Forest Grey), நார்டிக் உட் (Nordic Wood) மற்றும் பீச் ஃபஸ் (Peach Fuzz) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த மோட்டோ எட்ஜ் 50 அல்ட்ராவின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. ரூ.5000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.5000 லிமிடெட் பிரீயட் சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.10000 குறைவாக இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஜூன் 24ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் மற்றும் மோட்டோலா தளங்களில் ஆர்டர் செய்யலாம்.
Image Source: Motorola


Click it and Unblock the Notifications








