அதிருது இந்திய மார்க்கெட்.. 125W சார்ஜிங்.. 64MP கேமரா.. வருகிறது பிரமாண்டமான Motorola போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் டீசர் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது, அதில் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த டீசர் படம் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போன்றே உள்ளது. எனவே மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (motorola edge 50 ultra) ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் சிப்செட், 1டிபி ஸ்டோரேஜ் மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Edge 50 Ultra specifications): 6.7-இன்ச் பிஒஎல்இடி டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் 2,712 x 1,220 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 2500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குறிப்பாக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 SoC ) வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு 50எம்பி பிரைமரி கேமரா + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் இந்த கேமராக்கள் 3X ஆப்டிகல் ஜூம் (3x optical zoom) ஆதரவையும் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே ஆட்டோஃபோகஸ் அம்சம் கொண்ட 50எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமரா மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.
16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

4500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 125 வாட்ஸ் டர்போபவர் சார்ஜிங் (125W TurboPower charging) மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ( 50W wireless charging) வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளன. ஆனால் இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் இந்தியாவில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








