Home
Mobile

ஜூன் 18 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 64MP கேமரா.. 125W சார்ஜிங்.. வருகிறது Motorola 5ஜி போன். எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 125 வாட்ஸ் டர்போபவர் சார்ஜிங், 1டிபி ஸ்டோரேஜ் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது வரும் ஜூன் 18 ஆம் தேதி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் மோட்டோரோலா மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Motorola 5ஜி போன்..

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Edge 50 Ultra specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 2,712 x 1,220 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 2500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

தரமான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 SoC ) வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி OmniVision OV50H சென்சார் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு Samsung JN1 லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் இந்த கேமராக்கள் 3X ஆப்டிகல் ஜூம் (3x optical zoom)ஆதரவையும் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே ஆட்டோஃபோகஸ் அம்சம் கொண்ட 50எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமரா மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.

12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் +1டிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மாஸ் (Dolby Atmos), 3 மைக்ரோபோன்கள், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஜூன் 18 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Motorola 5ஜி போன்..

4500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 125 வாட்ஸ் டர்போபவர் சார்ஜிங் (125W TurboPower charging) மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ( 50W wireless charging) வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 7 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 7 802.11ax), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS) யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 197 கிராம் ஆகும். அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
motorola edge 50 ultra India launch date revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X