மளமளவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. 64எம்பி கேமரா.. 125W சார்ஜிங்.. எந்த மாடல்?
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி (Motorola Edge 50 Ultra 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.59,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த மோட்டோரோலா போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.
அதாவது தற்போது மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.44,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் இந்த மோட்டோரோலா போன் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Motorola Edge 50 Ultra 5G specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி போன். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
குறிப்பாக 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2712 x 1220 பிக்சல்கள், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், பி3 கலர் காமட், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), டிசி டிம்மிங் (DC Dimming),2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா + 64 எம்பி போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
அதேபோல் 4K அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங், ஸ்மார்ட் ஸ்டெபிளைசேஷன், அரிசோன் லாக், ஆட்டோபோகஸ் டிராக்கிங், செல்பீ வீடியோ மிரர், ஆடியோ எச்டிஆர், ஆடியோ ஜூம், போர்ட்ராய்டு, விலாக் மோட், ஸ்பாட் கலர், போட்டோ என்ஹான்ஸ்மென்ட், ஆட்டோ நைட் விஷன், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், கெஸ்ச்சர் கேப்ச்சர், டூயல் கேப்ச்சர் போன்ற பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 125W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளன. ஃபாரஸ்ட் கிரே (Forest Grey), நார்டிக் உட் (Nordic Wood) மற்றும் பீச் ஃபஸ் (Peach Fuzz) ஆகிய கலர்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் 12ஜிபி ரேம், 512ஜிபி மெமரி, ஈசிம் சப்போர்ட், டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், டால்பி ஹெட் டிராக்கிங், 3 மைக்ரோபோன்கள், IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








