Home
Mobile

மார்க்கெட்டே திணறப்போகுது.. 5000mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்..

மோட்டோரோலா நிறுவனம் அடுத்து இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது BIS சான்றிதழ் தளத்தில் XT2407-3 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 அம்சங்கள் (Motorola Edge 50 Specifications): 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்..

அதேபோல் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா, 5ஜி, ஜிபிஎஸ், புளூடூத், வைஃபை 6, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 போன். தற்போது வரை இந்த போனில் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 40 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 40 அம்சங்கள் (Motorola Edge 40 Specifications): 6.55 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்கள், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

மார்க்கெட்டே திணறப்போகுது.. இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்..

ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம்(Octa Core Dimensity 8020 6nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். அதோடு மாலி ஜி77 எம்சி9 ஜிபியு (Mali-G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் வருகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போன். டூயல் ஹைபிரிட் நானோ சிம் சிலாட் (Dual Hybrid Nano SIM Slot) மட்டுமே கொண்டிருக்கிறது இந்த போன். ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொண்டிருக்கிறது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 40 போன்

குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா+ 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா (Ultra-wide Autofocus Camera) என்கிற டூயல் ரியர் கேமரா இதில் உள்ளது. இந்த அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் மோக்ரோ ஆப்சன் (Macro Option) கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட கேமரா மாடலாகும். இந்த டூயல் கேமராவோடு எல்இடி பிளாஷ் (LED Flash) இடம் பெற்றுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

மார்க்கெட்டே திணறப்போகுது.. இந்தியாவுக்கு வரும் புது Motorola போன்..

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 40 போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (னுழடடில யுவஅழள) சப்போர்ட் உள்ளன. அதேபோல 3 மைக்ரோபோன்கள் (Microphones) வருகின்றன. ஆகவே, ஆடியோ குவாலிட்டி மிகவும் தரமாக இருக்கும்.

IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water/Dust Resistant) கொண்டிருக்கிறது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40. மேலும் இந்த போனில் பேட்டரி சிஸ்டம் மிரளவிடுகிறது. 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. அதோடு 15W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging), 5W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 spotted on BIS site:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X