யாரு விடுவா சொல்லுங்க.. சோனி கேமரா.. pOLED டிஸ்பிளே.. ஆஃபரில் மோட்டோரோலா போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 50 (MOTOROLA Edge 50) போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50 Specifications): 6.4-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 50 போன் 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி 3X டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமரா மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.
MIL-810H இராணுவ சான்றிதழ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது இந்த போன். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 மாடல்.
குறிப்பாக டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் பான்டோன் பீச் ஃபஸ் (Pantone Peach Fuzz) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
5000mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 50 போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications