பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 125W சார்ஜிங்.. கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிச்சிக்கும்படியான பட்ஜெட்டில் பிஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங், 4500mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல் லெதர் பேக் பேனல் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) போன் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த மோட்டோ மாடலின் ஆரம்ப விலை ரூ.31,999ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.3500 டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எந்த பேங்க் கார்டுக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது. விவரம் இதோ.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro Specifications): இந்த மோட்டோரோலாவில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. மிட்-பிரீமியம் கேமிங் பர்பாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4என்எம் மொபைல் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm Mobile) சிப்செட் உள்ளது.
அதேபோல அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 3 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் வருகிறது. இந்த போனில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) சூப்பர் எச்டி (Super HD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் கொண்ட 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே மாடலாகும்.
இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது. ஆகவே, பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது. 125W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging), 50W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) வருகிறது.
10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (Reverse Wireless Charging) வருகிறது. 4500mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவில் 50 எம்பி பிரைமரி கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.
இந்த கேமராவில் மோட்டோவின் பிரத்யேக குவாட் பிக்சல் டெக்னாஜி (Quad Pixel Technology) வருகிறது. அதேபோல ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் மற்றும் 50எக்ஸ் ஹைபிரிட் ஜூம் (50X Hybrid Zoom) வருகிறது. அதே குவாட் பிக்சல் டெக்னாலஜி உடன் 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதில் ஆட்டோ போகஸ் (Autofocus) சப்போர்ட் வருகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வருகிறது. பிளாக் பியூட்டி, லக்ஸ் லாவன்டர், மூன்லைட் பேர்ல் ஆகிய 3 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது.
இருப்பினும் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.3,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனின் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வெறும் ரூ.28,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








