ஏப்.1 காலி.. கம்மி பட்ஜெட்.. 3D டிஸ்பிளே.. 125W சார்ஜிங்.. AI கேமரா.. 12GB ரேம்.. சிலிகான் பேனல்.. எந்த மாடல்?
மொத்த மார்கெட்டும் மிரளும்படி பட்ஜெட்டில் 3டி பிஓஎல்இடி டிஸ்பிளே, ஏஐ பவர்ட் ப்ரோ-கிரேடு கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் போன்ற அல்ட்ரா பிரீமியம் அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) வருகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro Specifications): இந்த மோட்டோவில் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. 6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curverd Display) மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) சப்போர்ட் வருகிறது. எஸ்ஜிஎஸ் ஐ புரொடெக்சன் (SGS Eye Protection) கொண்டிருக்கிறது. ஆகவே, கேமிங் முதல் அவுட்டோர் வரையில் டிஸ்பிளே அவுட்புட் பிரீமியமாக இருக்கும்.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருவதால், குவாலிட்டியும் பக்காவாகவே கிடைக்கும். இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஹலோ யுஐ (Hello UI) சப்போர்ட் வருகிறது. 3 ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் வருகிறது.
இந்த சிப்செட் உடன் வெளியாகும் முதல் மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இருக்கப் போகிறது. இந்த போனில் ஏஐ பவர்ட் ப்ரோ-கிரேடு கேமரா (AI Powered Pro-Grade Camera) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 13 எம்பி மேக்ரோ + அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

இதுவொரு டெலிபோட்டோ ஓஐஎஸ் கேமரா (Telephoto OIS Camera) மாடலாகும். 30X ஹைபிரிட் ஜூம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 50 எம்பி ஆட்டோ போகஸ் செல்பீ ஷூட்டர் வருகிறது. ஏஐ சப்போர்ட் கொண்ட ஆட்டோ போகஸ் டிராக்கிங் (Auto Focus Tracking), அடாப்டிவ் ஸ்டெபிளைசேஷன் (Adaptive Stabilization) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
ஆகவே, கேமரா குவாலிட்டியும் கிரிஸ்டர் கிளியர் அனுபவம் மட்டுமல்லாமல், பிரீமியம் அவுட்புட் கொடுக்கும். இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக பேட்டரி சிஸ்டம் (Battery System) இருக்கிறது. 125W டர்போ பவர் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். டூயல் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), IP68 தர அண்டர் வாட்டர் புரொடெக்சன் (Underwater Protection) வருகிறது. சிலிகான் வேகன் லெதர் பேனல் (Silicone Vegan Leather Paner) மற்றும் மெட்டல் ஃபிரேம் (Metal Frame) டிசைன் கொண்டிருக்கிறது.
பிளாக் (Black), பர்பிள் (Purple) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ வரும் ஏப்ரல் 3ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த போனின் ஆரம்ப விலை ரூ.35,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, பட்ஜெட்டில் பிரீமியம் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி சிஸ்டம் கொண்ட போனாக இந்த மாடல் இருக்கப்போகிறது.


Click it and Unblock the Notifications








