வெளுக்குது ஆர்டர்.. பட்ஜெட்ல 125W சார்ஜிங்.. 50X ஜூம் கேமரா.. 3D டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) போனானது, பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பிஓஎல்இடி டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி கேமரா, 125W டர்போ சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் கம்மியான பட்ஜெட்டில் கொடுக்கிறது. இந்த மோட்டோவின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், அதற்கு ஏற்ப பீச்சர்களும் கொண்ட மொபைல் வேண்டுமென்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும். கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளே பீச்சர்கள் மற்றும் பேட்டரி பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro Specifications): இந்த மோட்டோவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் கொண்ட 3டி கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே (3D pOLED Curved Display) கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷனுடன் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பேனல் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் உள்ளது. இந்த பட்ஜெட்டில் கிடைக்காத பேட்டரி சிஸ்டம் கொண்டிருக்கிறது. 125W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (Reverse Wireless Charging) சப்போர்ட் உள்ளது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு பட்டையை கிளப்பும் அவுட்புட் கொடுக்கும். டிஸ்பிளே மற்றும் பேட்டரிக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் வருகிறது.
மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. இந்திய கேமரா பிரியர்கள் விரும்படியான பீச்சர்களுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 10 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது.
மெயின் கேமராவில் மோட்டோவின் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stablization Technology) கிடைக்கிறது. டெலிபோட்டோவில் 50X ஹைபிரிட் ஜூம் மற்றும் 3X சென்சார் ஜூமிங் வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தின் தீபாவளி டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.29,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








